mualaf

soccer

Culture

?max-results="+numposts1+"&orderby=published&alt=json-in-script&callback=ujposts2\"><\/script>");
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுல◌ானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கிறிஸ்தவ மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்◌த ஒளி விழா - 2013 நிகழ்வுகள் இராசதுரை அரங்கில் 2013.12.12 மு.ப 9.30-பி.ப 12.30 வரை சிறப்பாக இடம் பெற்றன. மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. யே◌ாசப் பெ◌ான்னையா ஆண்டகை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக கத்தோலிக்க  ஒன்றிய ஆன்மீக இயக்குனரும் மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வருமாகிய அருட்பணி  கலாநிதி F.x  டயஸ், கோட்டைமுனை சேகரம் மெதடிஸ்த திருச்சபை முதன்மைக்குரு வணபிதா A.ச◌ாமுவேல் சுபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டர்.

 சுவாமி விபுல◌ானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்ப◌ாளர் கல◌ாநிதி ◌க. பிறேம்குமார் , சிரேஷ்ர உதவி◌ப்பதிவ◌ாளர் 
A.Jகிறிஸ்டி ஆகியே◌ார்  கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் சுவாமி விபுல◌ானந்த அழகியல் கற்கைகள் நிறுவக  ◌மாணவர்களது பாடல்,நடன, நாடக நிகழ்வுகள◌ால் சிறப்புப் பெற்றன.

மிகச் சிறப்ப◌ான முறையில் மண்டப வடிவமைப்பு செய்யப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்டுச் செ◌ால்லக்கூடிய விடயமாக கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றிலே முதன் முறையாக மண்டபத்தினுடைய முழுமையான அலங்கரிப்பு கட்புல தொழிலடநுட்ப முறை மூலம் , நிகழ்வுகளுக்கேற்ப கட்புலக் காட்சிகளுடனும் காட்சிப்படுத்தப்பட்டமை எல்லோராலும் வியந்து பார◌ாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















ஹோட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது.

இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஹோட்டன் புல்நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடத்தக்கது.

மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும்.

12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






பேஸ்புக் நிறுவனம் தனது வருவாய் 60 வீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனத்தின் வருவாய் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. மேலும் 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாக அந்நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. விளம்பரங்கள் மூலமான வருவாயாக 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பேஸ்புக் பெற்றுக்கொண்டுள்ளதுடன் இது 66 வீத அதிகரிப்பென பேஸ்புக் சுட்டிக்காட்டுகின்றது.
 

பேஸ்புக்கினை மொபைல் சாதனங்கள் ஊடாக பாவிப்போரின் எண்ணிக்கை கடந்த சில காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனை பேஸ்புக் வெகுவாக ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளது. மொபைல் விளம்பரங்கள் ஊடாக பெரும் வருவாயை பேஸ்புக் பெற்று வருகின்றது.

அந்நிறுவனத்தின் தகவலின் படி பேஸ்புக்கினில் உள்ள 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களில் 874 மில்லியனுக்கும் அதிகமானோர் பேஸ்புக்கினை மொபைல் சாதனங்கள் ஊடாக உபயோகிக்கின்றனர். பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகர் சூக்கர் பேர்க் அண்மையில் மாநாடொன்றில் உரையாற்றும் போது பேஸ்புக் ஒரு மொபைல் நிறுவனம் என வர்ணித்திருந்தார்.

எனினும் மொபைல் விளம்பரப் பிரிவில் கூகுளே இன்னும் ஜாம்பவானாக உள்ளது. இக்காலாண்டில் மொபைல் விளம்பரங்கள் ஊடாக அந்நிறுவனம் பெற்றுக்கொண்ட வருவாய் 880 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.




நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின் வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும் அலை அலையாக வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது நல்லபடியாக{விளைவு நன்மை} தீயது தீயபடியாக {விளைவு தீமை}. நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப நமது எண்ண அலைகளும் மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத் தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும் அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள சூழலையும் பாதிக்கின்றது.

சரி முதலில் இந்த முதல் நிலையை சற்று ஆராய்வோம்.நாம் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக இருக்கும்போது இந்த மனோ நிலை நம்மை முதலில் தாக்குகின்றது.

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில் காதல் வசப்படும்போது அவர்கள் எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில் இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம் அவர்களை தாக்கும்.அதற்கான அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில் காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில் ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில் ஒரு கம்பீரம் காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும் முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால் எதிலும் ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE} இருக்கின்றது என்று பொருள்.

பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும் பாதிக்கும் என்று சொன்னேன் அல்லவா.சந்தோசத்தில் மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும் ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர் அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும் இது பொருந்தும்.சரி இந்த மாற்றம் அனைத்திற்கும் மூலப் பொருள் எது? முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மனோ நிலைதான்.

இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும் சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல் ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால் கட்டாயமாக பிறரால் பிரிக்கப் படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த அவர்களின் மனோநிலை இப்போது மாலா துயரத்தில் ஆழ்ந்து விடும்.இதன் வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில் சுறுசுறுப்பு இன்மை,தன் சுய அலங்காரத்தை அலட்சியப் படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர்.

அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் செய்கைகளையும்,வருகைகளையும்,தோற்றங்களையும் பிறர் விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால் இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக இருப்பர்.

கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல் ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில் மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில் அவர்களை பாதித்தது பிறகு அவர்களின் சுற்று சூழலையும் மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.

"கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்"

!உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள் உங்களுக்கு ஒரு வசீகரத் தோற்றதை தரவல்லது. !உங்களது சோகமான எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும் சூழலை தோற்றுவிக்க வல்லது.

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம் மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம் மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம் "மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்" இவை அனைத்தையும் சொன்னவர் "திருமூலர்" "MIND MOVES MATTER" "மனம்தான் சூழ்நிலையை உருவாக்குகின்றது"



ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.